இளவரசி டயானா மரணத்திற்கு யார் காரணம்? இறுதிச்சடங்கில் இளவரசரை கொல்ல சதித்திட்டம்: கசிந்த திடுக் தகவல்

Report Print Basu in பிரித்தானியா

இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கின் போது, அவரது கணவர் இளவரசர் சார்லஸை யாராவது கொல்ல முயற்சி மேற்கொள்ளலாம் என பக்கிங்ஹாம் அரண்மனை அஞ்சியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா ஜூலை 1981-ல் திருமணம் செய்து கொண்டனர்.ஆகஸ்ட் 1996-ல் விவாகரத்து செய்வதற்கு முன்னர் 1992 டிசம்பரில் இந்த ஜோடி முறையாக பிரிந்து சென்றது. சார்லஸ் 2005 ஆம் ஆண்டில் கார்ன்வாலின் டச்சஸ் கமிலா பார்க்கர் பவுல்ஸை மணந்தார்.

ஆகஸ்ட் 31, 1997 அன்று பாரிஸில் கார் விபத்தில் டயானா இறந்தார், அவரது பொது இறுதிச் சடங்கு செப்டம்பர் 6 ஆம் திகதி அமைக்கப்பட்டது. டயானாவின் மரணத்திற்கு எல்லோரும் முன்னாள் கணவர் சர்லஸை குற்றம் சாட்டியதால் அவருக்கு ஒருவித மரண அச்சுறுத்தல்கள் வந்தன என மெஜஸ்டியின் ஆசிரியர் இங்க்ரிட் செவார்ட் விளக்கியுள்ளார்.

டயானாவைப் பற்றி ஒரு சுயசரிதை எழுதிய ஆண்ட்ரூ மோர்டன், முன்னதாக வெளியிட்ட பதிப்பில், டயானாவின் மரணத்தின் போது, கோபத்தின் காரணமாக, சர்லஸின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை தாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகக் கூறியிருந்தார்.

மோர்டன் மேலும் கூறியதாவது: இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளின் போது, டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை இடையே உரையாடல்கள் நடந்தன. அப்போது, வில்லியம் மற்றும் ஹாரி இறுதி சடங்கைப் பின் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தால், இளவரசர் சார்லஸூம் தனியாக செல்ல அனுமதிக்க முடியாது.

ஏனெனில், சர்லஸ் மீது உள்ள கோபத்தினாலும், அவர் டயானாவை விவாகரத்து செய்த கசப்பும் காரணமாக, கூட்டத்தில் இருந்து யாராவது அவரை கொல்ல பார்க்கலாம் என அவர்கள் உறையாடிதாக ஆண்ட்ரூ மோர்டன் கூறியுள்ளார். இறுதியில் இரண்டு இளவரசர்களுடன் சார்லஸ், இளவரசர் பிலிப் மற்றும் ஏர்ல் ஸ்பென்சருடன் சவப்பெட்டியைப் பின்தொடர்ந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்