இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிரோடு வந்ததால் கைது ... எதற்காக தெரியுமா? விசாரணையில் தெரிந்த உண்மை

Report Print Santhan in பிரித்தானியா

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நபர் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அந்த நபர் தற்போது உயிரோடு கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kim Vincent Avis(55), ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், இந்த ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் Monastery கடற்கரை பகுதிக்கு குளிக்க சென்ற நிலையில், அதன் பின் வீடு திரும்பவேயில்லை.

இதனால் அவரின் மகன் Monterey-யில் இருக்கும் அதிகாரிகளிடம் தன் தந்தை காணமல் போய்விட்டதாக கூறி புகார் அளித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் மற்றும் அதிகாரிகள் அவரை கண்டுபிடிப்பதற்காக அந்த கடற்கரையில் தேடினர். ஆனால் அவர் கிடைக்காததால், ஹெலிகாப்டர் போன்றவைகள் எல்லாம் பயன்படுத்தியுள்ளனர், ஆனால் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாததால், அவர் இறந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது.

இதையடுத்து அவரைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு, அதிலிருந்து பெயிலில் வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் Kim Vincent Avis அங்கிருக்கும் Monterey பகுதியில் ஒரு வெள்ளை நிற காரில் செல்வது அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைக்க, பொலிசார் மற்றும் அதிகாரிகள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக டிராக் செய்த நிலையில், கடந்த வாரம் Colorado-வில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள அவர் மீண்டும் ஸ்காலந்திற்கு நாடு கடத்தப்படலாம் எனவும், இது தொடர்பான வழக்கு விசாரணை உள்ளூர் நீதிமன்றத்தில், இந்த மாத கடைசியில் விசாரணைக்கு வரலாம் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் Kim Vincent Avis இந்த குற்ற வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே இப்படி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட Kim Vincent Avis காணமல் போன இடத்திலிருந்தும், கைது செய்யப்பட்ட Colorado-விக்கும், இடையே 1300 மைல் தொலைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்