பறக்கும் விமானத்தின் கதவை உடைத்து குதித்த பிரித்தானிய இளம்பெண்: பகீர் கிளப்பிய சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் மடகாஸ்கர் நாட்டுக்கு விமானத்தில் சென்ற நிலையில், 3600 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின்போது சகபயணியின் பிடியில் இருந்து விடுபட்டு, பறக்கும் விமானத்தின் கதவை உடைத்து அவர் வெளியே குதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதர் மண்டிய காட்டுப்பகுதியில் அவர் குதித்துள்ளதால் சடலத்தை மீட்கும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும்,

சடலம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் மடகாஸ்கர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவியான 19 வயது அலனா கட்லேண்ட் என்பவரே பறக்கும் விமானத்தில் இருந்து குதித்து உயிரை விட்டவர்.

இவர் அரிய வகை நண்டுகள் தொடர்பில் கல்வி பயின்று வருகிறார். இதன் தொடர்பாகவே ஆய்வு மேற்கொள்வதற்காக சக மாணவி ஒருவருடன் குட்டி விமானம் ஒன்றில் மடகாஸ்கரில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடலில் இருந்து சுமார் 1130 மீற்றர் உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று குதித்துள்ளார்.

அவர் குதித்த பகுதியானது புலால் உண்ணும் ஃபோசா பூனைகள் மிகுந்த பகுதி என கூறப்படுகிறது.

அலனா ஏற்கெனவே ஐந்து முறை சித்தப்பிரமை தாக்குதல்களுக்கு உள்ளானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்த அலனாவின் பெற்றோர்கள் உடனடியாக மடகாஸ்கருக்கு சென்று விசாரித்துள்ளனர். மட்டுமின்றி தங்களது மகளுக்கு அங்கேயே அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers