16 வயதில் லொட்டரியில் 1.8 மில்லியன் வென்ற இளம்பெண்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவிலேயே மிகச் சிறு வயதில் 1.8 மில்லியன் பவுண்டுகளை வென்ற ஒரு பெண், இன்று வயதானவர்களை பார்த்துக் கொள்ளும் வேலையில் வெறும் 12,000 பவுண்டுகள் ஊதியத்தில் வாழ்ந்து வருகிறார்.

பிரித்தானியாவிலுள்ள Cumbria என்னும் நகரைச் சேர்ந்த Callie Rogers, வெறும் 16 வயதே இருக்கும்போது லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகளை வென்றார். உடனே அவருக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தார்கள்.

யார் என்ன உதவி கேட்டாலும் செய்தார், கார் வாங்க பணம் கேட்டாலும் கொடுத்தார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அதிக விலை மதிப்புள்ள பரிசுகளை வாரி வழங்கினார்.

கோடீஸ்வர பெண்ணான Callieயை காதலிக்க பலர் முன் வந்தார்கள். அவர்களில் Nicky Lawson என்பவரை திருமணமும் செய்து கொண்டார். உடனடியாக 180,000 பவுண்டுகள் மதிப்புடைய பங்களா ஒன்றிற்கு குடி போனார்கள். ஆனால் வாழ்க்கை எதிர்பார்த்ததுபோல் இல்லை.

நண்பர்கள் பணத்துக்காக கூடிய போலி நண்பர்கள் என்பது புரிந்தது. பல ஆயிரம் பவுண்டுகள் கடன் வாங்கிய அந்த போலி நண்பர்கள், ஒரு பென்னி கூட திருப்பிக் கொடுக்கவில்லை.

இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில், கணவரும் பிரிய, தற்கொலைக்கு முயற்சி செய்தார் Callie.

பிள்ளைகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டார்கள். தனது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காக 17,000 பவுண்டுகள் செலவு செய்து மார்பகத்தை அழகாக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

செல்வம் செலவழிந்து போன நிலையில், இன்று வயதானவர்களை பார்த்துக் கொள்ளும் வேலையில் வெறும் 12,000 பவுண்டுகள் ஊதியத்தில் வாழ்ந்து வரும் Callie, இருந்தாலும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

தான் விவரம் அறியாத சிறுமியாக இருந்ததை பயன்படுத்திக் கொண்டு, தன்னை பலரும் ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கும் Callie, லொட்டரி வாங்கும் வயதை 18 ஆக உயர்த்த வேண்டும் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்