இரு முறை கருச்சிதைவு! மனம் வெறுத்து செயற்கையாக குழந்தை பெற முயன்ற பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரு முறை கருச்சிதைவு ஏற்பட்டு இனி இயற்கை முறையில் குழந்தையே பிறக்காது என எண்ணியிருந்த இளம் பெண் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

துர்ஹாம் நகரை சேர்ந்தவர் ஸ்டெப்ம்னி லட்சம் (27). இவர் கணவர் மைக்கேல் கப் (30).

ஸ்டெப்னி கடந்த இரண்டாண்டுகளாக கருத்தரிக்க முயன்றும் அவரால் முடியவில்லை.

இதோடு இரு முறை அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இனியும் இயற்கையாக கருத்தரிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த ஸ்டெப்னியும், மைக்கேலும் செயற்கை முறையில் குழந்தை பெற முடிவெடுத்தனர்.

இதற்கான நடைமுறையை ஸ்டெப்னி தொடங்கிய நிலையில் கணவனும், மனைவியும் சேர்ந்து ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றனர்.

ஸ்பெயினில் இருந்து ஊருக்கு வந்த போது ஸ்டெப்னிக்கு தலைசுற்றல் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் வந்த முடிவுகள் அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

அதாவது ஸ்டெப்னி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதுவும் அவர் வயிற்றில் மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி ஓலி அன்னா, இசபெல்லா, பிரியனா ஆகிய மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்.

தற்போது மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர்.

ஸ்டெப்னி கூறுகையில், இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் இயற்கையாக கருத்தரிக்க இனி முடியவே முடியாது என நினைத்தேன், ஆனால் கருத்தரித்து குழந்தை பெற்றேன்.

எனக்கு எடுக்கப்பட்ட முதல் ஸ்கேனில் வயிற்றில் ஒரு குழந்தை இருப்பதாக தெரியவந்தது, அடுத்த இருவாரத்தில் எடுக்கப்பட்ட ஸ்கேனில் இரண்டு குழந்தைகளும், அதற்கு அடுத்த வாரம் எடுக்கப்பட்ட ஸ்கேனில் மூன்று குழந்தைகளும் இருப்பது உறுதியானது.

இதை என் வாழ்க்கையில் நடந்த அற்புதம் என்றே கூறுவேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்