72 மணி நேரத்தில் பிரித்தானியாவை உலுக்கிய 6 துயர சம்பவம்: முதல் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மட்டும் போதை மருந்துக்கு 6 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பொலிசார் Leigh-on-Sea பகுதியில் மரணமடைந்த Cian Daly என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

சியான் டேலியின் நண்பர்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 நாட்களில் போதை மருந்து தொடர்பாக மரணமடைந்த 6 பேரில் சியானும் ஒருவர். எசெக்ஸ் பகுதியில் குறிப்பிட்ட போதை மருந்து புழக்கம் இருப்பதை இதுவரை உறுதி செய்யாத பொலிசார்,

ஆனால் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. முதற்கட்ட விசாரணையில் அவர் குறிப்பிட்ட போதை மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்தது.

இரண்டாவதாக சியான் திங்களன்று மரணமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கத்தக்க நபர் மரணமடைந்துள்ளார். தொடர்ந்து 20 வயது இளைஞர் ஒருவரும் 40 வயது பெண்மணி ஒருவரும் போதை மருந்து காரணமாக மரணமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் எசெக்ஸ் பகுதியில் குடியிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்