220 ஆண்கள்! ஏக்கத்தில் தவித்த அழகான லண்டன் பெண் மேற்கொண்ட அதிரடி... வைரலான வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா
553Shares

லண்டனை சேர்ந்த பெண்ணொருவர் 220 ஆண்டுகளுடன் டேட்டிங் சென்ற நிலையிலும் அவர்களில் யாரையும் மணக்காமல் நாயை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

லண்டனை சேர்ந்த பெண் எலிசபெத் ஹோட். மிக அழகான பெண்ணான இவருக்கு நான்கு முறை நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனது.

ஹோட் இதுவரை 220 ஆண்களுடன் டேட்டிங் சென்றாலும் அவர்களை மணக்க அவர் ஒத்து கொள்ளவில்லை.

இது குறித்து முன்னர் பேசிய அவர், நான் ஆண்கள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டேன். நான் 6 டேட்டிங் தளங்களை பயன்படுத்தி 8 ஆண்டுகளில் 220 ஆண்களைச் சந்தித்தேன்.

ஆனால் அனைத்துமே தோல்வியில் முடிந்தது என கூறினார்.

இதையடுத்து நிச்சயம் ஒரு நல்ல நபரை அவர் மணப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஹோட்.

ஆம், லோகன் என்ற நாயை அவர் திருணம் செய்து கொண்டுள்ளார்.

அதன்படி பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் அவர் திருமணம் செய்தவற்கான ஏற்பாடு செய்யப்பட்டது, இது லைவ் ஷோ என்பது கூடுதல் தகவல்.

இந்த நிகழ்ச்சியில் தான் லோகன் என்ற நாயை அவர் அறிமுகப்படுத்தி, மோதிரம் மற்றும் ப்ரேஸ்லெட் மாற்றி திருணம் செய்துகொண்டார்.

இது குறித்து ஹோட் கூறுகையில், என்னுடைய நண்பர்கள் பலரும், ஆண்களைக்காட்டிலும் நாயைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என கூறினார்கள்.

ஒரு வருடத்துக்கு முன்பு தான் லோகனை வாங்கினேன், நான் லோகனை காணும் முன்வரை உடைந்திருந்தேன். என்னை லோகன் காப்பாற்றியது என கூறியுள்ளார்.

இந்த வினோத செயலை செய்துள்ள ஹோட்டுக்கு பலர் ஆதரவு அளித்தாலும், பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்