'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
697Shares

23 வயதான இந்திய வம்சாவளி பெண் "மிஸ் இங்கிலாந்து" பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பாஷா முகர்ஜி (23) தன்னுடைய 9 வயதிலே பெற்றோருடன் லண்டனுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

அங்கு படித்து வளர்ந்த பாஷா, இங்கிலாந்தின் நியூ பிரிட்ஜ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மிஸ் இங்கிலாந்து 2019-ம் ஆண்டிற்கான போட்டியில் நூற்றுக்கும் அதிகமான மொடல்களை வீழ்த்தி பட்டம் பெற்றார். 2018ம் ஆண்டு பட்டம் பெற்ற அலிஷா கோவி, பாஷா முகர்ஜிக்கு முடி சூட்டி மகிழ்ந்தார்.

இதன்மூலம் நடக்கவிருக்கும் 2019ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இங்கிலாந்து சார்பில் பாஷா முகர்ஜி கலந்துகொள்வார்.

இரண்டு மருத்துவ பட்டங்களையும், ஐந்து மொழிகளையும் பேசும் அழகு ராணி, நேற்று இரவு நடந்த போட்டியை வென்ற சில மணி நேரங்களிலேயே லிங்கன்ஷையரின் பாஸ்டனில் உள்ள பில்கிரிம் என்.எச்.எஸ் மருத்துவமனையில் தன்னுடைய மருத்துவ பணியை துவங்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்