லண்டன் சாலையில் நள்ளிரவில் நடந்த திகிலூட்டும் சம்பவம்.. உயிருக்கு போராடும் பொலிஸ் அதிகாரி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டனில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த 30 வயதுடைய பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 8ம் தேதி நள்ளிரவு லண்டனில் உள்ள லெய்டன் சாலையில் வழக்கமான வாகன சோதனையில் பொலிஸ் அதிகாரி ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த வாகனம் ஓன்றை சோதனைக்காக நிறுத்தும் படி கூறியுள்ளார்.

ஆனால், வாகனம் நிற்காமல் சென்றுள்ளது, வாகனத்தை பொலிசார் விரட்டி பிடிக்க, வாகனத்திலிருந்து இறங்கிய 50 வயதுடைய ஓட்டுநர் பெரிய கத்தியால் பொலிசாரை சரமாரியாக குத்தியுள்ளார். எனினும், சமாளித்த பொலிஸ் அதிகாரி டேசர் துப்பாக்கியால் தாக்குதலில் ஈடுபட்ட நபரை நிலைகுலையச் செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர உதவி குழுவினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த அதிகாரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்த பொலிசார், காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பொலிஸ் அதிகாரி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அதிகாரியின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்