பிரித்தானிய பிரதமருடன் துபாய் இளவரசி ஹயாவின் சகோதரர் திடீர் சந்திப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

துபாய் அரசரின் மனைவியும் ஜோர்டான் மன்னரின் சகோதரியுமான இளவரசி ஹயா பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனுடன் ஜோர்டான் மன்னர் திடீர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

ஜோர்டான் மன்னரான இரண்டாம் அப்துல்லா டவ்னிங் தெருவில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்தார்.

அவர்கள் இருவரும் சிரிய அகதிகள் பிரச்சினை உட்பட பல விடயங்கள் குறித்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஜோர்டான் பிரித்தானியாவின் நீண்ட கால நட்பு நாடாகும். இதற்கிடையில் துபாய் அரசரின் மனைவியான ஹயா (45), தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் முயற்சியில் பிரித்தானியாவில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் தங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.

அவர் தனது இரண்டு பிள்ளைகளையும் கட்டாய திருமணம் செய்விக்கப்படுதிலிருந்து பாதுகாப்பதற்காகவும், அவர்கள் பிரித்தானியாவை விட்டு தங்கள் சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதை தடுப்பதற்காகவும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த நிலைமையில் இளவரசி ஹயாவின் சகோதரரான ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இளவரசி ஹயாவும், ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும், துபாய் மன்னர் ஹுசேனின் பிள்ளைகளாவார்கள்.

பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்திக்கும்போது ஜோர்டான் மன்னரின் முகம் சிவந்ததை உன்னிப்பாக கவனித்துள்ள இளவரசி ஹயாவுக்கு நெருக்கமானவர்கள் சிலர், தன் கணவனுடனான பிரச்சினைக்காக நீதிமன்றம் ஏறுவதற்காக ஹயா லண்டன் வந்ததும் மன்னரின் முகம் வெட்கத்தால் சிவந்ததற்கான காரணங்களில் ஒன்று என்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்