6 நாட்களாக மாயமான பிரித்தானிய சிறுமி: காட்டில் ஒலிக்கும் ஒரு தாயின் கதறல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மலேசியாவில் மாயமான் பிரித்தானிய சிறுமியை 6 நாட்களை தாண்டியும் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லண்டனை சேர்ந்த மீப்-செபாஸ்டியன் தமபதியினரின் 15 வயது மகள் நோரா கோய்ரின். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு சற்று தொலைவில் அடர்ந்த வனப்பகுதியருகே உள்ள சுற்றுலா ரிசார்ட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நோரா அறையிலிருந்து மாயமாகியுள்ளார். கற்றல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடு கொண்ட மகள் காணாமல் போயிருப்பதை பார்த்து அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்த ஆரம்பித்தனர். வான்வழித் தேடுதல், மோப்ப நாய்கள், அந்தப் பகுதியை நன்கு அறிந்த பூர்வக்குடியினர் என நூற்றுக்கும் அதிகமானோர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் ரிசார்ட்டுக்கு 4மைல் தொலைவில் மோப்ப நாய்கள் கைரேகை மற்றும் கால்தடங்களை கண்டுபிடித்தன. இதனால் பதறிப்போன நோராவின் குடும்பத்தினர், தங்களுடைய மகள் கடத்தி செல்லப்பட்டிருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

அந்த கால்தடங்களை பொலிஸார் பின்பற்றி சென்றும் கூட, நோராவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் காண்போரை கண்கலங்க வைக்கும் மற்றொரு முயற்சியாக நோராவின் தாயர் குரலை பதிவு செய்து அதை ஸ்பீக்கரில் ஒலிபரப்பி தேடி வருகின்றனர். அதில், “நோரா டார்லிங், நோரா, நோரா ஐ லவ் யு, உன் அம்மாதான் கூப்பிடுகிறேன்” என்று அவர் பேசியுள்ளார்.

மேலும், அந்த பகுதியில் உள்ள பாதைகளில் நோராவின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்