பள்ளி தோழியை பல வருடங்களுக்கு பின் சந்தித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பல வருடங்களுக்கு பின் கண்டுபிடித்த பள்ளி தோழியை, முதன்முதலாக சந்தித்த பள்ளியிலேயே பிரித்தானிய இளைஞர் திருமணம் செய்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா ஃபுல்தோர்ப் (31) மற்றும் பில் ஆலன் (32) என்கிற இருவரும் 1992ம் ஆண்டு நார்தாம்ப்டன் பகுதியிலுள்ள கிங்ஸ்டார்ப் லோயர் பள்ளியில் படித்த போது முதன்முதலாக சந்தித்து கொண்டனர்.

அதன்பிறகு மேல்நிலை படிப்பிற்காக பில் ஆலன் குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்தது. இதனால் இருவரும் எந்தவித தொடர்பும் இல்லாமல் பிரிந்துவிட்டனர்.

2009ம் ஆண்டில் பில் ஆலன் பேஸ்புக்கில் மீண்டும் ஜெம்மாவை சந்தித்தார். நண்பர்களாக பழக ஆரம்பித்த இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

இதனையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த ஜோடி, கடந்த வாரம் தங்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்துக்கொண்ட பள்ளியில் உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்