பிரித்தானியா மகாராணிக்கு எதிராக சதி! கடும் விரக்தியில் இருப்பதாக வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் அரசியல்வாதிகளுக்கு ஆட்சி செய்ய இயலாமை இருப்பதாக ராணி நம்புகிறார் என அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நபர் தெரிவித்துள்ளார்.

அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நபர் கூறியதாவது, பிரித்தானியாவின் அரசியல்வாதிகளுக்கு ஆட்சி செய்ய இயலாமை இருப்பதாக ராணி நம்புகிறார்.

ராணி அரசியலில் இருந்து விலகி நிற்கிறார், ஆனால் எம்.பி.க்கள் அவரை பிரெக்ஸிட் விவகாரத்தில் இழுக்க சதி செய்ததால் அவரது விரக்தி வெளிப்பட்டுள்ளது

ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராணி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். பிரித்தானியா அரசியால்வாதிகளின் மீதான ராணியின் விரக்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய அரசியல் வர்க்கத்தின் மீதான அவரது ஏமாற்றம் மற்றும் சரியாக ஆட்சி செய்ய இயலாமை பற்றி ராணி பேசுவதை நான் கேள்விப்பட்டேன். அவர் உண்மையிலேயே திகைத்துப் போயிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

இதுவரை, பிரெக்ஸிட் விவகாரம் முழுவதும் அரச குடும்பம் நடுநிலையாகவே இருந்து வருகிறது, இருப்பினும் சமீபத்திய ராணியின் கருத்துக் கண்ணோட்டத்தில் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை அடுத்து போரிஸ் ஜான்சன் விலக மறுத்தால், ராணியை தலையிட வேண்டும் என எம்.பி.க்கள் அழைப்பு விடுத்து சதி செய்ததை அடுத்து, ராணியின் இத்தகைய கருத்து வெளிவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்