மாயமான பிரித்தானியா சிறுவன் வழக்கில் திருப்பம்: முக்கிய அறிவிப்பு வெளியிட்டது பொலிஸ்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கவலையுடன் பேருந்தில் பயணித்து மாயமான சிறுவன் பத்திரமாக மீட்க்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 11 அல்லது 12 வயதுடைய சிறுவன், செருப்பு மற்றும் கவுன் உடை அணிந்து பேருந்தில் பயணித்துள்ளான்.

டெர்பிக்குச் செல்லும் பேருந்தில் இருந்த இறங்கிய சிறுவன் மாயமாகியுள்ளார். இதனையடுத்து இரவு 10.15 மணியளவில் நாட்டிங்ஹாம்ஷைர் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சிறுவனை குறித்து விசாரணை முன்னெடுத்தனர்.

அவர் நாட்டிங்ஹாம்ஷையரின் ஸ்டேபிள்ஃபோர்டு பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்ததாகவும், சாடெஸ்டனை நோக்கிச் செல்வதாகவும் பேருந்து ஓட்டுநரிடம் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், அவர் ஓல்ட் ராக் பப் அருகே பேருந்தில் இருந்து இறங்கி நாட்டிங்ஹாம் நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கியதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். மாயமான சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்த விசாரணையில் பல அதிகாரிகள், சிறப்பு தேடல் குழுக்கள் மற்றும் பொலிஸ் ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன, இது சிறுவன் மீது நாங்கள் கொண்டிருந்த அக்கறையின் அளவையும், இந்த விடயத்தில் நாங்கள் எவ்வளவு தீவிரமாக செயல்பட்டோம் என்பதையும் இது காட்டுகிறது என நாட்டிங்ஹாம்ஷைர் காவல்துறையைச் அதிகாரி ஜான் லீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்