மலேசியாவில் காணாமல் போன பிரித்தானிய சிறுமி: பூதம் தூக்கிப்போனதாக தெரிவிக்கும் மந்திரவாதி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
புதிய இணைப்பு

சற்று முன் கிடைத்த செய்திப்படி Betembum மலைப்பகுதியில் காணாம்ல் போன பிரித்தானிய சிறுமியின் உடல் கிடைத்துள்ளதாக பொலிசார் தகவல் அளித்துள்ளார்கள்.

அந்த உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இவ்வளவு விவரங்கள்தான் அளிக்க முடியும் என்றும், உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே உறுதியான தகவல்களை அளிக்க முடியும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

சற்று மூளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட ஒரு பிரித்தானியச் சிறுமி மலேசியாவுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் காணாமல் போனார்.

Nora Quoirin (15) என்ற அந்த பெண் காணாமல் போய் ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அவளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய பொலிசார் களமிறங்கியுள்ளனர்.

ஆகத்து மாதம் 4ஆம் திகதி Meabh மற்றும் Sebastienஇன் மகளான Nora தனது படுக்கையறையிலிருந்து மாயமாகியிருந்தார்.

அவளது குடும்பம் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிலும் சேறு நிறைந்திருந்ததால், யாராவது வந்து Noraவைத் தூக்கிச் சென்றிருந்தால் நிச்சயம் கால் தடங்கள் கிடைத்திருக்கும்.

அப்படி எதுவுமே சந்தேகத்திற்குரிய விதத்தில் இல்லாததால், Noraதான், தானாகவே வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், shaman எனப்படும் மந்திரவாதி ஒருவர் பொலிசாரால் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இம்மாதிரி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மந்திரவாதிகளின் உதவியை நாடுவது சாதாரணமான ஒன்றுதான்.

அப்படி பொலிசார் அழைத்து வந்த மந்திரவாதி ஒருவர், Noraவை பூதம் ஒன்று தூக்கிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Nora ஒரு சிறப்பு தேவைகள் உள்ள குழந்தை என்பதால், அவளை தனது தத்துப் பிள்ளையாக வளர்ப்பதற்காக பூதம் தூக்கிச் சென்றிருக்கலாம் என்கிறார் அவர்.

இன்று இரவு நான் அந்த ஆவியிடம் Noraவை எப்படி, எங்கிருந்து தூக்கிச் சென்றதோ அதே இடத்தில் திரும்பக் கொண்டு வந்து விட்டு விடுமாறு கேட்பேன், பதிலுக்கு அது ஏதாவது வேண்டும் என்று கேட்கும், அதை நான் கொடுத்து விடுவேன் என்று கூறும் அந்த மந்திரவாதி, முக்கியமான விடயம் என்னவென்றால் குழந்தை கிடைத்துவிடுவாள் என்பதுதான் என்கிறார்.

இதற்கிடையில் சிறுமி காணாமல் போய் ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டதால் இறந்த உடல்களைத் தேடும் நாய்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேடுதல் வேட்டையை மேலும் விரிவாக்கும் முயற்சியில், Noraவை கண்டுபிடிக்க உதவ துப்பு கொடுப்போருக்கு 10,000 பவுண்டுகள் பரிசளிப்பதாக, Noraவின் பெற்றோர் தங்கள் பங்குக்கு அறிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்