வீட்டில் வளர்த்த பூனையால் லொட்டரியில் 1 மில்லியன் பவுண்டுகளை வென்ற தம்பதி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை வென்றதற்கு, தங்களுடைய வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி தான் காரணம் என கூறியுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த ஆண்ட்ரூ (46) மற்றும் பவுலா (43) தம்பதியினர் கடந்த மாதம் 24ம் திகதியன்று, தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிக்கு உணவு வாங்க மறந்து, எரிபொருள் நிரப்புமிடத்திற்கு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து 6 வயதான ginger tom-ற்கு கேக் வாங்குவதற்காக கடை ஒன்றிற்கு சென்றுள்ளனர். அந்த கடையில் லொட்டரி சீட்டு விற்பனையானதால், அதனை வாங்கி சரிபார்த்துள்ளனர்.

எதிர்பாராதவிதமாக அதில் 1 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட உற்சாக மிகுதியில் மீண்டும் பூனைக்கு உணவு வாங்க மறந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பரிசுத்தொகையை பெற்றுள்ள தம்பதி, இதற்கு முழுமுக்கிய காரணம் தங்களுடைய வளர்ப்பு பூனை எனவும், அதற்கு தான் நன்றி கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவுஸ்திரேலிய உள்ளிட்ட பல நாடுகளை சுற்றிப்பார்க்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

லொட்டரியில் வென்ற பரிசுத்தொகையை வைத்து முதன்முதலாக, தம்பதியினர் அவர்களின் 12 வயது மகன் சேவியருக்கு புதிய தொலைபேசி ஒன்றினை வாங்கியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்