மலேசிய காட்டில் காணாமல் போன பிரித்தானிய சிறுமியை கண்டு பிடிப்பதில் சிறுபங்காற்றிய இந்தியர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மலேசிய காட்டில் காணாமல் போன பிரித்தானிய சிறுமியை கண்டுபிடிப்பதில் இந்தியர் ஒருவரும் சிறிய அளவில் பங்காற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Kenny Chan என்பவர் தலைமையில் ஆண்களும் பெண்களுமாக ஒரு குழுவினர், காணாமல் போன பிரித்தானியச் சிறுமியான நோராவைத் தேடிச் சென்ற நிலையில், இந்தியர் ஒருவரை சந்தித்துள்ளனர்.

அந்த இந்தியர் தனக்கு அந்த பகுதி நன்கு பரிச்சயமானது என்றும், தன்னால் அவர்களுக்கு உதவ இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து சென்ற அந்த குழுவினர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது, ஒரு மோசமான நாற்றம் வீசுவதை உணர்ந்திருக்கின்றனர்.

அப்பகுதிக்கு சென்றபோதுதான் அங்கு நோராவின் உடல் கிடப்பதை அவர்கள் கண்டிருக்கின்றனர்.

அந்த உடலைக் கண்டதும், அப்பகுதிக்கு அவர்கள் செல்லவோ, உடலைத் தொடவோ செய்தால், அது பொலிசாரின் தடயவியல் ஆய்வுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், சுமார் 15 மீற்றருக்கு இப்பால் நின்று, பொலிசாரை அழைத்திருக்கிறார்கள்.

என்னால் அந்த உடலைப் பார்க்க முடிந்தது என்று கூறும் Kenny, அந்த சிறுமி தலைக்கு அடியில் கையை வைத்து தூங்குவது போலவே படுத்திருந்தாள் என்கிறார்.

அவள் கையில் சிறு கீறல்கள் தவிர வேறு காயங்கள் இல்லை என்றும், ஆனால், அவள் சில நாட்களுக்கு முன்பே இறந்திருப்பாள் என்று எண்ணுகிறேன் என்கிறார்.

நோராவின் உடல் மீது இலைகளோ தளைகளோ மூடியிருக்கவில்லை என்கிறார் Yeap என்பவர்.

மீட்புக் குழுவினர் இப்பகுதிக்கு ஏற்கனவே வந்திருந்தால் நோராவின் உடலைப் பார்த்திருப்பார்கள் என்றும், எனவே அந்த உடல் முன்பு தேடும்போது அங்கு இருந்திருக்கவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

நோராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எளிதில் கண்டுபிடிக்கத்தக்க ஒரு இடம் அல்ல என்று கூறும் அவர், அவள் அந்த நீரோடை ஓரமாக நடந்து வந்திருந்தால் அங்கு அவளது காலடித்தடம் இருந்திருக்க வேண்டும், ஆனால் அங்கு காலடித்தடங்களே இல்லை, அப்படியானால், அவள் தண்ணீருக்குள்ளேயே நடந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்.

நோரா எப்படி இறந்தாள் என்பது உடற்கூறு ஆய்வுக்கு பின்னர்தான் தெரியவரும். ஆனால் நோராவின் உடல் நிர்வாணமாக கண்டுபிடிக்கப்பட்டதால் அது தொடர்பாக பல வதந்திகள் உலாவி வருகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்