குழந்தை ஆர்ச்சியுடன் ஒரு வாரமாக மாயமான இளவரசர் ஹரி-மேகன் தம்பதி; என்ன நடந்தது? கசிந்தது தகவல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி-மேகன் தம்பதி மற்றும் குழந்தை ஆர்ச்சி கடந்த வாரம் யார் கண்ணிலும் தென்படாத நிலையில், அவர்கள் குடும்பத்துடன் எங்கு சென்றார்கள் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

கடந்த ஆகத்து 4ம் திகதி மேகன் 38வது பிறந்த நாளை கொண்டாடினார். இரண்டு நாட்களுக்கு பின்னர், ஆகத்து 6ம் திகதி குழந்தை ஆரச்சியுடன் ரகசிய சுற்றுலா சென்ற இளவரசர் ஹரி-மேகன் திங்கட்கிழமை ஆகத்து 12ம் திகதி நாடு திரும்பியுள்ளனர்.

பெற்றோர்களாக முதன்முதலில் ஹரி-மேகன் ஸ்பெயினில் உள்ள மத்திய தரைக்கடல் தீவான லிப்ஸாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த 6ம் திகதி தனி விமானம் மூலம் இளவரசர் ஹரி-மேகன் மற்றும் குழந்தை ஆர்ச்சி லிப்ஸா பயணித்துள்ளனர்.

விடுமுறை காலம் என்பதால் லிப்ஸா தீவில் புகைப்பட கலைஞர்கள் பெரும்பாலானோர் இருப்பார்கள் என்பதால் குறித்து சுற்றுலா திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி மற்றும் மேகன் பிரித்தானியாவில் இருந்து ஒரு பாதுகாப்பு படையுடன் பயணம் மேற்கொண்டுள்ளனர், மேலும் ஐந்து ஸ்பெயின் பாதுகாவலர்களையும் பாதுகாப்பிற்கு பணி அமர்த்தி இருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்