அகதிகள் முகாமில் 5 வயது சிறுமிக்கு கிடைத்த பொம்மை: 24 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஐந்து வயதில் அகதிகள் முகாமில் தமக்கு பொம்மை ஒன்றை பரிசாக அளித்த நபரை நீண்ட 24 ஆண்டுகளுக்கு பின்னர் யுவதி ஒருவர் தேடி கண்டுபிடித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

குறித்த நபரை கண்டுபிடிக்க தமக்கு உதவ வேண்டும் என கடந்த திங்களன்று லண்டனில் குடியிருக்கும் 29 வயதான மேவன் பபாக்கர் என்ற யுவதி சமூக வலைதளத்தில் விடுத்த கோரிக்கையே தற்போது பலன் கண்டுள்ளது.

1990 காலகட்டத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த போதுதான், அறிமுகமற்ற நபர் ஒருவர் மேவனுக்கு பொம்மை பைக் ஒன்றை பரிசளித்துள்ளார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், அந்த பொம்மையை தமக்கு பரிசளித்த அந்த நபரின் தற்போதைய நிலை என்ன என்பதை அறியவும்,

அவரை சந்திக்கவும் மேவன் முடிவு செய்துள்ளார். அதன் ஒருபகுதியாகவே சமூக வலைதளத்தில் அந்த நபரின் அப்போதைய புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1990 காலகட்டத்தில் சுமார் 5 ஆண்டு காலம் அகதிகள் முகாமில் இருந்ததாக துவங்கும் அந்த பதிவில், மேவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்தில் அகதிகள் முகாமில் பணியாற்றி வந்த நபர் இவர். சம்பவத்தன்று என் மீது இரக்கப்பட்டு பொம்மை பைக் ஒன்றை எனக்கு பரிசளித்தார்.

5 வயது சிறுமிக்கு இதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். எனக்கு இந்த நபரின் பெயர் உள்ளிட்ட எந்த தகவலும் தெரியவில்லை.

இந்த பதிவை பார்க்க பேரிடும் பொதுமக்கள் தயவு செய்து எனக்கு உதவுங்கள் என மேவன் உருக்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

மேவனின் இந்த உருக்கமான பதிவை சுமார் 7,000 பேர் பகிர்ந்துள்ளனர். இறுதியில் ஜேர்மனியில் வைத்து மேவன் அந்த நபரை நேரில் சந்தித்துள்ளார்.

அவரது பெயர் எக்பெர்ட் எனவும் 1990 முதற்கே அவர் அகதிகளுக்காக பணியாற்றி வருவதாகவும் மேவன் தற்போது தெரிவித்துள்ளார்.

குர்து இனத்தை சேர்ந்த மேவனின் பெற்றோர் முதலாம் வளைகுடா போர் காலத்தில் ஈராக்கில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் 1995 வரையான காலகட்டத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளனர். அங்கிருந்து வெளியேறும் நாளிலேயே எக்பெர்ட் பொம்மை பைக் ஒன்றை மேவனுக்கு பரிசளித்து சென்றுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers