முடிவுக்கு வந்தது பிரித்தானியா- ஈரான் மோதல்..! முற்றுப்புள்ளி வைத்தது ஜிப்ரால்டர்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவால் கைப்பற்றப்பட்ட ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் கிரேஸ் 1 விடுவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவிற்கு எண்ணெய் எடுத்துச் செல்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் பிரித்தானியா கடற்படையினர் யூலை 4 ம் திகதி பிரித்தானியா மத்தியதரைக் கடல் பகுதியான ஜிப்ரால்டரின் கடல் பகுதியில் வைத்து ஈரானின் கிரேஷ் 1 டேங்கரைக் கைப்பற்றினர். ஆனால், குறித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது.

கிரேஸ் 1 டேங்கரை விடுவிக்கமாறு பிரித்தானியாவை ஈரான் தொடர்ந்து வலியுறுத்தியது. கடந்த மாதம் பிரித்தானியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடாவில் பயணித்த பிரித்தானியாவின் ஸ்டெனா இம்பீரோ டேங்கரை ஈரான் கைப்பற்றியது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வந்த நிலையில் தற்போது இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் பிரித்தானியாவால் கைப்பற்றப்பட்ட ஈரானின் கிரேஸ் 1 கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவிற்கு தனது சரக்குகளை அனுப்ப மாட்டேன் என்று ஈரானிய அரசாங்கத்திடமிருந்து முறையான எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற்ற பின்னர் கிரேஸ் 1 டேங்கரை விடுவிக்க ஜிப்ரால்டர் முடிவு செய்ததாக ஜிப்ரால்டர் குரோனிக்கிள் Newapaper தெரிவித்துள்ளது.

அந்த அடிப்படையில், ஜிப்ரால்டரின் முதலமைச்சர் ஃபேபியன் பிகார்டோ, கிரேஸ் 1 தடுப்புக்காவல் உத்தரவை நீக்கி, கப்பலை ஈரானுக்கு பயணிக்க அனுமதித்து முடிவு செய்துள்ளார் என்று ஜிப்ரால்டர் குரோனிக்கிள் newspaper ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கிரேஸ் 1 கப்பலை அமெரிக்க பறிமுதல் செய்ய அனுமதி கோரி ஜிப்ரால்டர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஜிப்ரால்டரின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அந்தோனி டட்லி கூறியதாவது, தற்போது நீதிமன்றத்தில் அமெரிக்க மனு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.

கடந்த மாதம் ஈரானால் கைப்பற்றப்பட்ட ஸ்டெனா இம்பீரோ டேங்கரின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, ஸ்டெனா இம்பீரோவிலும் நிலைமை அப்படியே இருக்கிறது, பிரித்தானியா மற்றும் ஈரானிடமிருந்து மேலும் முன்னேற்றங்களுக்கு நிறுவனம் காத்திருப்பதாக கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்