சிறுமியின் உடல் சிதைக்கப்பட்டுள்ளது... உண்மை வெளிவர வேண்டும்: கதறும் பிரித்தானிய பெற்றோர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

மலேசியாவில் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய சிறுமியின் உடல் சிதைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தற்போது புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய 15 வயது சிறுமி நோரா குய்ரினின் பெற்றோர், விடை அளிக்கப்படாத பல கேள்விகள் மிஞ்சியுள்ளது என்கின்றனர்.

சிறுமி நோராவின் தாத்தா, இந்த விவகாரத்தில் பொலிசார் புதிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தமது பேத்தியின் விவகாரத்தில் உண்மை கண்டிப்பாக வெளிவர வேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார்.

இதேபோன்று, சிறுமி நோரா வழக்கில் நீதி விசாரணை மேற்கொள்ளும் வழக்கறிஞரும், குற்றச்செயல் நடந்திருக்கிறது என்ற வாதத்தை புறக்கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நோராவின் குடும்பம் தங்கியிருந்த பகுதியில் இருந்து சுமார் 1.6 மைல்கள் தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே 10 நாட்களாக மாயமான நோராவின் சடலம் மீட்கப்பட்டது.

தேடுதல் வேட்டையின் முதல் 7 நாட்கள், மீட்பு குழுவினர் நோராவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை சல்லடையாக சலித்ததாக தெரிவித்திருந்தனர்.

இதனிடையே உடற்கூறு ஆய்வில், சிறுமி நோரா பட்டினியால் மரணமடைந்ததாகவும், காட்டுக்குள் தனியாக சிக்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், மலேசிய பொலிசாரால் இதுவரை, நோராவின் சடலம் ஏன் உள்ளாடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக மீட்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் தர முடியவில்லை.

7 நாட்கள் தேடியபோது கண்டெடுக்கப்படாத சடலம், பின்னர் அந்த பகுதியில் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது எனவும்,

இரண்டாவது நபர் இந்த விவகாரத்தில் கண்டிப்பாக உட்பட்டுள்ளார் எனவும், நோராவின் உடல் சிதைக்கப்பட்டுள்ளது எனவும் 67 வயதான சில்வைன் என்ற நோராவின் தாத்தா புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்