கார் வெடிகுண்டு தாக்குதலில் நூலிழையில் தப்பிய இளம்பெண்: நாடு கடத்தும் பிரித்தானியா

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய இளம்பெண்ணின் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் Bath நகரில் 2013 ஆம் ஆண்டு முதல் ஈராக் நாட்டை சேர்ந்த யாசிர் அல் அலூசி குடும்பமானது குடியிருந்து வருகிறது.

யாசிர் ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வந்த நிலையில், பிரித்தானியாவில் கல்வி பயின்று வரும் தமது மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரித்தானியா வந்துள்ளனர்.

இந்த நிலையில் அவரது விசா ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் மீண்டும் ஐக்கிய அமீரகம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

அதன் பின்னர் பிரித்தானியாவிலேயே குடியிருக்கும் பொருட்டு, புகலிட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஆனால் பிரித்தானிய அரசு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தாமதப்படுத்தி வந்துள்ளதுடன், தற்போது யாசிர் குடும்பத்தினரின் புகலிட கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

இதனால் யாசிர் குடும்பமானது நாடுகடத்தப்படும் அபாயத்தில் உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற மாணவி யாமின் கனவு தகர்ந்துவிடும் என்றே அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பிரித்தானியாவில் இருந்து யாசிர் குடும்பம் நாடுகடத்தப்பட்டால், கண்டிப்பாக ஷியா பிரிவு போராளிகளால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என யாசிர் அச்சப்படுகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு யாசிர் குடும்பத்துடன் சென்ற வாகனத்தின் மீது ஷியா பிரிவு போராளிகள் வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுத்துள்ளனர்.

இதில் நூலிழையில் யாசிர் குடும்பம் உயிர் தப்பியுள்ளது. அதன் பின்னர் ஜோர்தானுக்கு தப்பியுள்ளனர். அங்கிருந்து பணி நிமித்தம் யாசிர் குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் குடியிருந்த யாசிர், பிரித்தானியாவில் கல்வி பயின்று வந்த மகளை காண வந்த நிலையில் இங்கேயே குடியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்