பிரித்தானிய வரலாற்றிலேயே முதல் முறையாக, மக்கள் முன் ஒரு பிரித்தானிய பிரதமரின் காதலி, அதாவது முறைப்படி திருமணம் செய்து கொள்ளாத ஒரு நபர் உரையாற்ற இருக்கிறார்.
ஆனால் லண்டனிலுள்ள டவ்னிங் தெரிவிலுள்ள 10ஆம் எண் வீட்டின் முன் அவர் உரையாற்றப்போவதில்லை! அத்துடன் அவர் பேச இருப்பது சுற்றுச்சூழல் தொடர்பாக...
பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கும் அவரது காதலியாகிய கேரி சைமண்ட்சுக்கும், ஜான்சன் பதவியேற்பதற்கு முன் ஒரு நாள் கடுமையான சண்டை ஏற்பட, பொலிசார் அவர்கள் வீட்டின்முன் குவியும் சூழல் ஏற்பட்டது.
அத்துடன் ஜான்சனின் பதவிக்கும் பிரச்சினை என்றும் பேச்சு அடிபட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக மீண்டும் இருவரும் பூங்கா ஒன்றில் கைகோர்த்து அமர்ந்திருக்கும் படங்கள் சில வெளியாகி, ஊடகங்களின் எதிர்பார்ப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டன.
என்றாலும் தனது இரண்டாவது மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாத நிலையில், ஜான்சன் தன்னுடைய காதலியுடன் தனது வீட்டில் குடியேறுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
அப்படியிருக்கும் நிலையில், ஜான்சன் மட்டும் முதலில் டவ்னிங் தெருவில் உள்ள பிரதமர் இல்லத்தில் குடியேற, கேரி தாமதாக வந்து அவருடன் சேர்ந்து கொண்டார்.
இந்நிலையில் ஜான்சன் பிரதமராக பதவியேற்றபின் முதல் முறையாக அவரது காதலி கேரி, நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.