தந்தை வயது நபரை காதலிக்கும் 16 வயது சிறுமி: அதிர்ச்சியில் பெற்றோர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

போலந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் பிரித்தானியாவை சேர்ந்த 42 வயதுள்ள நபரை தீவிரமாக காதலித்து வருகிறார்.

போலந்து நாட்டை சேர்ந்த உர்சுலா கிரெஸ்லாக் (19) என்கிற சிறுமி தன்னுடைய 16 வயதில் விடுமுறையை கழிப்பதற்காக பிரித்தானியாவில் உள்ள அத்தை வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அங்கு உர்சுலா தன்னுடைய அத்தையின் நண்பரான நைகல் தோர்பேயை சந்தித்துள்ளார். அவர் சுற்றுலா சென்ற இரண்டு வாரத்திலே உர்சுலாவின் அத்தைக்கும் அவருடைய கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் உர்சுலா மற்றும் அவருடைய அத்தை நைகலின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். முதல் சந்திப்பிலேயே நைகல் மற்றும் உர்சுலாவிற்கு இடையே ஈர்ப்பு அதிகரித்துள்ளது.

நாளடைவில் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளனர். இந்த சமயத்தில் தான் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.

இந்த காதல் உர்சுலாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும், நைகல் உடனான இணைப்பை துண்டிப்பதற்கு அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவை அனைத்தையும் மீறி உர்சுலாவும் தொடர்ந்து நைகல் உடன் இணைப்பில் இருந்துகொண்டே தான் இருக்கிறார்.

இந்த நிலையில் அவருடைய காதலை இணையதளவாசிகள் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் உர்சுலாவும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்