வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது அடித்த அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரனாக மாறிய 19 வயது இளைஞர்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் குளியல் தொட்டியில் குளித்து கொண்டிருக்கும் போது வந்த யோசனையில் லொட்டரி விளையாட்டில் ஈடுபட்ட 19 வயது இளைஞருக்கு பெரிய பரிசு கிடைத்துள்ளது.

சாம் லாடன் (19) என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் வீட்டு குளியலறையில் சாம் குளித்து கொண்டிருக்கும் போது அவருக்கு லொட்டரி விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதையடுத்து அங்கேயே தனது செல்போனில் நேஷனல் லொட்டரி செயலியை பதிவிறக்கம் செய்த சாம், அதற்கான கணக்கை தொடங்கி லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவருக்கு அதில் இரண்டாவது பரிசாக மாதம் £10,000 என ஒரு வருடத்துக்கு கிடைத்துள்ளது.

தரவு ஆய்வாளராக பணியாற்றி வரும் சாமுக்கு பரிசு விழுந்தது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாம் கூறுகையில், முதல் வேலையாக நியூ யோர்குக்கு சுற்றுலா செல்லவுள்ளேன், இதுவரை என் வாழ்நாளில் லொட்டரி விளையாட்டில் நான் ஈடுபட்டதேயில்லை.

ஆனால் எனக்கு தெரிந்த ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவில் பரிசு விழுந்தது. இதையடுத்தே நானும் விளையாடினேன்.

அதுவும் குளித்து கொண்டிருக்கும் போது விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது, பரிசு விழுந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers