3 மாத கைக்குழந்தைக்கு எத்தனை ஆயாக்கள்? திணறும் ஹரி - மேகன் குடும்பம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

குட்டி இளவரசர் ஆர்ச்சி பிறந்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் மூன்றாவது ஆயாவை, ஹரி - மேகன் தம்பதியினர் தேடி வருகின்றனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகனுக்கு கடந்த மே 6ம் திகதியன்று ஆர்ச்சி என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சில நாட்களிலே ஆர்ச்சியை கவனித்து கொள்வதற்காக ஒரு ஆயாவை அரச தம்பதியினர் நியமித்தனர். ஆனால் அவர் அடுத்த சில நாட்களில் வேலையே விட்டு நின்றுவிட்டார்.

அவரை தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி குட்டி இளவரசர் அழுவதால் மேகனால் சரியாக உறங்க முடியவில்லை என புதிய ஆயாவை வேலைக்கு அமர்த்தினர்.

அவர் இரவு நேரங்களில் மட்டுமே வேலை செய்து வந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு ஆயாவை தம்பதியினர் தேடி வருகின்றனர்.

ஆனால் இளவரசர் வில்லியம் - கேட் தம்பதி ஆயாவை பணியமர்த்துவதில் இவர்களை போல பெரிதும் சிரமப்படவில்லை. கடந்த 5 வருடமாக மரியா தெரசா என்பவர் தான் தம்பதியினரின் மூன்று குழந்தைகளுக்கும் ஆயாவாக இருந்து வருகிறார்.

இளவரசர் ஜார்ஜ் 8 மாத குழந்தையாக இருந்த போது 2014ம் ஆண்டில் மரியா பணியமர்த்தப்பட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers