முதல் திருமணத்தை மறந்த கணவனுக்காக மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்... என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா
543Shares

ஸ்காட்லாந்தில் முதல் திருமணத்தை மறந்த கணவரை மனைவி மீண்டும் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Aberdeen பகுதியைச் சேர்ந்த தம்பதி Bill Duncan. 71 வயதான இவருக்கு Anne(69) என்ற மனைவி உள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 2001-ஆம் ஆண்டு சந்தித்து, அதன் பின் மூன்று வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வயது முதிவின் காரணமாக Bill Duncan-க்கு மறதி ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் தன் வாழ்வின் முக்கியமான நினைவுகளை மறந்துள்ளார். இது குறித்து குறித்து மருத்துவரிடம் சோதித்த போது அவர்களும் வயது முதிவின் காரணமாக ஏற்படும் மறதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் Anne தன் கணவரை ஒரு குழந்தை போன்று கவனித்து வந்துள்ளார். Bill Duncan-க்கு Anne-வை திருமணம் செய்து கொண்டது மறந்துவிட்டதால், அவர் தன்னுடைய காதலி என்று அவருடன் பழகி வந்துள்ளார்.

Anne-வும் அவரிடம் அதே போன்று பழகி வந்துள்ளார். இந்நிலையி கடந்த வாரம் Bill Duncan தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி Anne-விடம் கூற, அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு மகள் உள்ளதாகவும், அவரும் இந்த திருமணத்திற்கான அனைத்து வேலைகளிலிலும் ஈடுபட்டுள்ளார். அதன் படி இவர்களின் திருமணம் கடந்த சனிக்கிழமை Aberdeen -வில் இருக்கும் குறித்து இடத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது.

இந்த திருமணத்தைக் கண்ட சிலர் கண்கலங்கியதாகவும், Anne இப்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கணவருக்கு இது போன்ற பிரச்சனை இருந்தால், அதை கண்டு கொள்ளாமல் செல்லும் மனைவிகள் இருக்கும் இந்த காலத்தில், Anne அவரிடம் ஒன்றாக இருந்து, அவரிடம் காதலை பெற்று மீண்டும் திருமணம் செய்து கொண்டது சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் Anne கணவரிடம் நம் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்த விஷயத்தை அவரிடம் கூறினாரா? இல்லையா? என்பது குறித்து தெரியவில்லை.மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்