மரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை: ஒரு நெகிழ்ச்சி செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக, ஒரு தந்தை தனது உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.

தெற்கு வேல்ஸிலுள்ள Caerphilly நகரைச் சேர்ந்த Mike Summers (56), தனது மகள் சாராவை புற்றுநோய்க்கு பறிகொடுத்தார்.

2016ஆம் ஆண்டு சாரா தனது 29ஆவது வயதில் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்தார்.

தனது தந்தையிடம் கடைசியாக பேசும்போது, தான் இறந்த பிறகு தனது பிள்ளைகள் மூவரையும் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட சாரா, மேலும் ஒரு கோரிக்கையையும் அப்பாவின் முன் வைத்தார்.

அது என்னவென்றால், Mike தனது உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்பதுதான்.

அப்போதுதான் அவரால் உடல் நலத்துடன் இருக்க முடியும், தனது பிள்ளைகளையும், தான் விட்டுச் செல்லும் கணவரையும் கவனித்துக் கொள முடியும் என்பது சாராவின் எண்ணம். அப்போது Mike, 167 கிலோ எடை உடையவராக இருந்தார்.

தனது மகளின் கோரிக்கையின்படி, தனது பேரக்குழந்தைகளையும் மருமகனையும் கவனித்துக் கொள்வதற்காக தனது உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார் Mike.

167 கிலோ எடை உடையவராக இருந்த Mike, 76 கிலோ குறைத்து தற்போது 92 கிலோ எடை உடையவராக இருக்கிறார்.

நான் மிகவும் சுயநலம் மிக்கவனாக இருந்தேன் என்று கூறும் Mike, எனது மகளை இழந்தபோதுதான் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், எல்லாரையும் விட்டு விட்டு செல்ல வேண்டியிருக்குமே என்பது எனக்கு புரிந்தது என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்