தேர்வு முடிவுகள் வெளியான பரபரப்பில் பிரித்தானியா: ராஜ குடும்பத்தினர் எப்படி கல்வி கற்றார்கள்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் GCSE தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ராஜ குடும்பத்தினர் எப்படி அந்த தேர்வுகளை எதிர்கொண்டார்கள் என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

இளவரசர் வில்லியம் Eton கல்லூரியில் பயின்ற இளவரசர் வில்லியம் 12 GCSE தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார்.

இளவரசர் ஹரி அண்ணன் வில்லியம் பயின்ற அதே கல்லூரியில் பயின்ற ஹரி அண்ணன் அளவுக்கு படிக்கவில்லை என்றாலும் 11 தேர்வுகளில் வென்றுள்ளார்.

இளவரசி கேட் ஆரம்பத்திலிருந்தே சிறந்த மாணவியாகத் திகழ்ந்த கேட் 11 GCSE தேர்வுகளில் வென்றதோடு, St Andrews கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்துள்ளார்.

இளவரசி மேகன் அமெரிக்காவில் GCSE தேர்வுகள் கிடையாது.

என்றாலும் மேகன் நன்றாக படிப்பவர் என்று மட்டும் தெரிகிறது. இளவரசர் சார்லஸ் இளவரசர் சார்லஸ் மகன்களை ஒப்பிடும்போது, கடுமையான சூழலில் கல்வி பயின்றாராம்.

கட்டுப்பாடுகள் மிக்க Gordonstoun பள்ளியில் பயின்ற அவர் வரலாற்றில் பட்டம் பெற்றுள்ளார்.

இளவரசி டயானா பள்ளியில் சரியாக படிப்பதில்லையாம், இரண்டு முறை அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தாராம் அவர்.

மகாராணியார் மகாராணியாரின் தந்தை பள்ளியை விரும்பவில்லையாம். அவரது தாயாரோ மகிழ்ச்சியாக இருப்பது கல்வியை விட முக்கியம் என்று கருதினாராம்.

ஆனாலும் மகாராணியாருக்கு அரண்மனையிலேயே தினமும் காலை 9.30 முதல் 11 மணி வரை கல்வி கற்பிக்கப்பட்டதாம்.

அவரது உறவினரான Edward VIII பதவியைத் துறந்ததையடுத்து, எதிர்கால மகாரணியாவதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றாராம் மகாராணியார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்