தாய்ப்பால் கொடுப்பதற்கு கூட இடம் தரவில்லை... வேதனையடைந்த தாய்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கூட்டம் நிறைந்த ரயிலில் குழந்தைக்கு பால் கொடுக்க கூட இடம் தராத பயணிகளை தாய் ஒருவர் இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த 22 வயதான சோஃபி மோலினக்ஸ் என்பவர், Shropshire-லிருந்து Ludlow Castle-க்கு, தனது காதலன் ராப் மூர் (25) மற்றும் அவர்களது ஒரு வயது மகன் செஸ்டர் மூர் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை ரயிலில் எறியுள்ளார்.

காலை 11.39 மணிக்கு ரயிலில் ஏறியபோது தம்பதியினர் திகைத்துப் போனார்கள். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இருக்கையில் இருந்த 50 பயணிகளில் ஒருவர் கூட, குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த சோஃபிக்கு இடம் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

30 நிமிடங்கள் பயணம் நீடித்தது. அதேசமயம் குழந்தையும் பசியால் அழ ஆரம்பித்துவிட்டது. அந்த சமயத்தில் கூட ஒருவரும் இடம் கொடுக்க முன்வரவில்லை. உடனே சோஃபி கழிவறை அருகே தரையில் அமர்ந்து தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பயணிகளின் செயலால் ஆத்திரமடைந்துள்ள சோஃபி, எங்களிடம் கார் வாங்குவதற்கு வசதி இல்லாத காரணத்தால் தான் ரயிலில் பயணித்தோம். ஆனால் அங்கிருந்த 50 பேரில் ஒருவர் கூட இருக்கை கொடுக்க முன்வரவில்லை. எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

என் குழந்தை பசியில் சட்டையை பிடித்து இழுக்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு அங்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. அதனால் அந்த இடத்திலேயே அமர்ந்து தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். நல்லவேலையாக என்னுடைய காதலன் அந்த இடத்தில் இருந்தார். இல்லாமல் போயிருந்தால் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

இனிமேலாவது ஆரோக்கியமான பொது அறிவுள்ள பயணிகள் குழந்தைகளுடன் வரும் இளம் தாய்க்கு இருக்கைகள் கொடுப்பார்கள் என தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்