பிரித்தானியாவில் சாப்பிட வந்த இந்தியருக்கு உணவு வழங்க மறுத்த உணவகம்.... அபராதம் மட்டும் இவ்வளவா!

Report Print Santhan in பிரித்தானியா

அயர்லாந்தில் இந்திய ஹோட்டலில் இந்தியருக்கு உணவு வழங்க மறுக்கப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

அயர்லாந்தில் டர்பன் பகுதியில் Ravi’s Kitchen என்ற பெயரில் ஹோட்டல் இயங்கிவருகிறது. இந்திய ஹோட்டலான இந்த ஓட்டல் இந்திய உணவுகளுக்காக புகழ்பெற்றது.

இந்நிலையில் இந்த ஹோட்டலுக்கு மையங் பட்நாகர் என்னும் இந்தியர் தன்னுடைய நண்பர்களுடன் உணவு சாப்பிட வந்துள்ளார்.

ஆனால் வெகு நேரமாகியும், அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு மட்டும் எந்த பணியாளர்களும் வந்து என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கவில்லை.

இதனால் அவர் உடனடியாக அங்கிருந்த பெண் ஊழியரிடம் ஏன் எங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கவில்லை என கேட்க, அதற்கு அந்த பெண், நீங்கள் இந்தியர்கள் ஆதலால் உங்களுக்கு உணவு இல்லை என பதில் அளித்துள்ளார்.

இதனை கோபமுற்ற அந்த நபர் மையங் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உணவு கொடுக்காத அந்த ஹோட்டலுக்கு 3 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் 2,39,553 ரூபாய்) அபராதம் விதித்து, அந்த தொகையை மையங் பட்நாயருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்