பிரித்தானியாவில் சாதித்து காட்டிய சிரியா அகதி பெண்... குவியும் பாராட்டுக்கள்

Report Print Santhan in பிரித்தானியா

சிரியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அகதியாக பிரித்தானியாவிற்கு வந்து தற்போது படிப்பில் சிறந்த மாணவியாக சாதித்து காட்டியுள்ளதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சிரியாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த போரினால் அங்கிருந்து Maha என்பவர் தன் மகள் Haneen Al-Ghazawi மற்றும் மகன் Anas-வுடன் பிரித்தானியாவிற்கு அகதியாக குடிபெயர்ந்துள்ளார்.

இவரின் கணவர் இறந்துவிட்டார். பிரித்தானியாவின் Blyth-ல் இவர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் வந்த புதிதில் Haneen Al-Ghazawi ஆங்கிலம் தெரியாமல் தவித்து வந்துள்ளார்.

ஆனால் அதன் பின் கொஞ்சம், கொஞ்சமாக ஆங்கிலம் கற்ற இவர், Northumberland-ன் Blyth-ல் இருக்கும் Bede Academy-யில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டிற்கான GCSEs-ல் இவர் philosophy, theology, ethics மற்றும் Arabic-ல் 9 grade மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதே போன்று maths, biology, chemistry மற்றும் physics-ல் 8 grade பெற்றுள்ளார். ஆங்கிலமே தெரியாமல் வந்த Haneen Al-Ghazawi தற்போது தன்னுடைய 17 வயதில் இதை சாதித்து காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய தேர்வு நேரத்தில் நான்கு முதல் 5 மணி நேரம் மட்டுமே இரவு நேரத்தில் தூங்குவேன், மற்ற நேரங்களில் வேலை போக படிப்பேன்.

எனக்கு Cambridge University மிகவும் பிடிக்கும், அதனால் அங்கு படிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Haneen Al-Ghazawi இந்த கோடையில், Cambridge University-யில் A-levels இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் தொடர்பாக படிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் அகதியாக வந்து இந்தளவிற்கு படிப்பில் ஆர்வம் காட்டி சாதித்து வரும் இந்த மாணவிக்கு சமூகவலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்