பிரித்தானியாவில் லொட்டரி டிக்கெட் மூலம் கோடிக்கணக்கில் பரிசை வென்ற 19 வயது இளைஞன், அந்த பணத்தில் மூலம் நாய் குட்டி வாங்கியதை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பிரித்தானியாவின் Leamington பகுதியைச் சேர்ந்தவர் Sam Lawton. இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் நேஷனல் லொட்டரி செயலியை பதிவிறக்கம் செய்த சாம், அதற்கான கணக்கை தொடங்கி லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டார்.
அப்போது இவருக்கு அதில் இரண்டாவது பரிசாக மாதம் 10,000 பவுண்ட் என வருடத்திற்கு 120,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 2,63,84,022 ரூபாய் ) விழுந்தது.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த இவர், இந்த பரிசில் தன்னுடைய முதல் வேலையாக, அமெரிக்காவின் நியூயார்க்கின் சுற்றுலாவிற்கு செல்லவுள்ளேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதை பலர் சரியாக பயன்படுத்த தெரியாமல் தற்போது சாதரண வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக Sam Lawton-ன் நடவடிக்கை ஒவ்வொன்றையும் ஊடகங்கள் கவனித்து வருகின்றன.
அந்த வகையில், இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், தங்கள் வீட்டிற்கு புதுவர என்று அழகாக நாய் குட்டி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.