1000 காதலிகள்... உல்லாச வாழ்க்கை: பிரித்தானியா இளவரசரின் அந்தரங்கங்களை புட்டு புட்டு வைத்த நெருங்கிய நண்பர்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஆண்ட்ரூவுக்கு 1000-க்கும் மேற்பட்ட காதலிகள் இருக்கின்றனர், ஆனால், அவர் இளம் பெண்களுடன் தவறு செய்ததே இல்லை என அவரின் நெருங்கிய நண்பர் வலியுறுத்தியுள்ளார்.

சிறார் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்ட நாள் முதல், இளவரசர் ஆண்ட்ரூவின் தனிப்பட்ட வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

ஏனெனில், எப்ஸ்டீன் இளவர்சர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இதனால், சிறார் பாலியல் குற்றச்சாட்டுகளில் இளவரசருக்கு தொடர்பு இருக்குமோ என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இளவரசரின் நெருங்கிய நண்பர் கூறியதாவது, அவர் குடிக்க மாட்டார், அவர் புகை பிடிக்கமாட்டார், அவர் போதைப்பொருளை ஒருபோதும் உட்கொண்டதே இல்லை, ஆனால், செக்ஸ் என்பது அவரது வாழ்க்கையில் பெரிய விஷயம்.

பிரித்தானியாவின் வர்த்தக தூதராகவும் பிற அரச கடமைகளுக்காகவும் உலகம் முழுவதும் பயணம் செய்தது அவருக்கு சில அழகான பெண்களை அணுகுவதற்கு வழி வகுத்தது.

அவர் ஒரு பாலியல் ஆற்றல் நிறைந்த ஒரு ஆண், நீங்கள் விரும்பினால், அவர் ஒவ்வொரு துறைமுகத்திலும் பெண்ணுடன் இருக்கும் மாலுமியைப் போன்றவர்.

அவர் அழகான பெண்களையே விரும்புவார், பல ஆண்டுகளாக அவருடன் பழகிய அழகிய பெண்களை கணக்கிட்டால் அது ஆயிரத்திற்கும் மேலாகும். ஆனால், அவருக்கு இளம் பெண்கள் மீத ஆர்வம் இருந்ததே இல்லை, உலகின் மிக அழகான பெண்கள் அவரை கவர்ந்திழுக்கும் நபராக காணும் போது, அவர் ஏன் இளம் பெண்களை விரும்ப வேண்டும்.

அவர் இரவு விருந்தில் பங்கேற்பதை விரும்புவார், தன்னையே ரசித்துக்கொள்வார், ஆனால் யாராவது தவறாக பயன்படுத்தப்பட்டாலோ அல்லது பாலியல் கடத்தலில் ஈடுபட்டாலோ அவர் அதிர்ச்சியடைந்து விடுவார் என்று இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்