இளவரசி டயானாவின் கல்லறைக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் மேகன்...

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தன் காதல் கணவருக்கு மிகவும் பிரியமான அவரது தாயாரின் கல்லறைக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள இளவரசர் ஹரியின் மனைவி மேகன் முடிவு செய்துள்ளாராம்.

இளவரசர் ஹரிக்கு தனது தாயார் இளவரசி டயானாவை எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே திருமணமான புதிதிலிருந்தே இளவரசர் ஹரியின் மனைவி மேகன், ஹரிக்கு பிடித்த டயானாவின் நகைகளை அணிந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு தனது கணவர் ஹரியை மகிழ்விப்பதுண்டு.

ஆரம்பத்தில் டயானா 2.0 யார்? இளவரசி கேட்டா அல்லது இளவரசி மேகனா? என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதி வந்தன.

இந்நிலையில், இளவரசி மேகன், இளவரசி டயானாவின் கல்லறைக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

ஆகத்து மாதம் 31ஆம் திகதி டயானாவின் 22ஆவது நினைவு நாள் வரும் நிலையில், அன்று இளவரசர் ஹரி, மேகன் மற்றும் அவர்களது மகன் குட்டி இளவரசர் ஆர்ச்சி ஆகியோர் டயானாவின் கல்லறைக்கு செல்ல இருக்கிறார்களாம்.

இளவரசி மேகன் முதல் முறையாக Northamptonshireஇலுள்ள இளவரசி டயானாவின் கல்லறை அமைந்துள்ள அவரது மூதாதையர்களின் இல்லத்திற்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்