8 வயது மகன் மீது சந்தேகம்... மனைவியை நீதிமன்றத்திற்கு இழுத்த பிரித்தானியர்: இழப்பீடு கேட்டு வழக்கு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் தமது 8 வயது மகன் மீது கொண்ட சந்தேகத்தால் மனைவி மீது வழக்குத் தொடர்ந்த பிரித்தானியர், இழப்பீடும் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், குறித்த பெண்மணி கண்டிப்பாக, தமது மகனின் தந்தை யார் என்பதை கணவனிடன் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

ஆனால், அந்த தகவலை அவர் குறித்த சிறுவனிடம் தெரிவிக்க வேண்டாம் எனவும், உரிய காலம் வரும்வரை பொறுமைகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளது.

இதனிடையே தாம் அந்த சிறுவனுக்காக செலவிட்ட மொத்த தொகையையும் திருப்பி தர வேண்டும் என அந்த நபர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நபர்களை நாடி, அறிவுரை கேட்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் எவரின் பெயரும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

8 வயது மகன் தொடர்பில் அந்த தம்பதி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. தம்மிடம் அந்த சிறுவனின் தந்தை யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

ஆனால் குறித்த பெண்மணி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் அந்த நபர்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் மீண்டும் நடைபெற உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்