கோடிக்கணக்கான பரிசு! பெற்ற தாயை கழுத்தறுக்க சென்ற மகன்.. மன அழுத்தத்தால் நேர்ந்த சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸில் கோடிக்கணக்கில் தனக்கு பரிசு விழுந்த லொட்டரி சீட்டை தாய் மறைத்து வைத்ததாக கூறி அவரை தாக்கி கொல்ல முயன்ற மகனுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிரஹாம் மேக்னி (32) என்ற இளைஞர் கடந்த யூன் மாதம் 16ஆம் திகதி வீட்டில் இருந்த தனது தாயை தாக்கியுள்ளார்.

அப்போது, எனக்கு லொட்டரியில் £100,000 பரிசு விழுந்துள்ளது, நீ வீட்டில் சிசிடிவி கமெராவை பொருத்தி அதன்மூலம் நான் லொட்டரி சீட்டை வைத்த இடத்தை கண்டுபிடித்து அதை திருடி மறைத்து வைத்துள்ளாய்.

அதை உடனடியாக எனக்கு கொடு என கூறியவாறு தொடர்ந்து தாயின் கழுத்தை நெரித்ததோடு அவரை தாக்கினார்.

இதன்பின்னர் மேக்னியும், அவர் தாயும் பாட்டி வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கும் இதே காரணத்தை கூறி கத்தியால் தாய் கழுத்தை அறுக்க மேக்னி முயன்றார்.

இதையடுத்து பயந்து போன பாட்டி பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் பொலிசார் உடனடியாக வீட்டுக்கு வந்து மேக்னியை கைது செய்தனர்.

இது குறித்து மேக்னி தாய் கூறுகையில், அவன் என்னிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வான் என நினைத்து பார்க்கவில்லை, என் மீது மேக்னி பாசமாக தான் இருந்தான்.

ஆனால் ஒரு முறை சிறைக்கு சென்றுவிட்டு வந்தபின்னர் அவன் போக்கு மாறியது என கூறியுள்ளார்.

இதனிடையில் மேக்னிக்கு லொட்டரியில் பரிசு உண்மையிலேயே விழுந்ததா என்ற விபரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கைது செய்யப்பட்ட மேக்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது விசாரணையில், மேக்னி சில காலமாக எல்லா விடயத்துக்கும் பதட்டப்படுகிறார் எனவும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்தது.

எப்படியிருந்தாலும் பெற்ற தாயை தாக்கி காயம் ஏற்படுத்தி அவரை கொல்ல முயன்ற மகனை மன்னிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

அதனால் மேக்னிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்