நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்.. நாங்கள் பின்வாங்க மாட்டோம்! பிரித்தானிய பிரதமர் போரிஸ்

Report Print Kabilan in பிரித்தானியா

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்பு பேட்டியளித்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், சர்வதேச சமூகத்தில் இருந்து பிரித்தானியா பின்வாங்காது என்று தெரிவித்தார்.

பிரான்சில் ஜி7 உச்சி மாநாடு நடந்து வருகிறது. ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். பிரித்தானியா சார்பில் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

அவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரெக்சிட்டிற்கு பிறகு பிரித்தானியா உலக அரங்கில் ஆற்றல்மிக்க நாடாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘எங்கள் நாடு எடுத்துள்ள ஜனநாயக முடிவு குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், நாங்கள் உலக நாடுகளிலிருந்து விலகி நிற்போம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். சிலர், பிரித்தானியாவின் சிறந்த நாட்கள் கடந்து சென்று விட்டதாகவும் நினைக்கிறார்கள்.

அந்த நபர்களிடம் நான் கூறுகிறேன். நீங்கள் மிகவும் தவறாக நினைக்கிறீர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினாலும், சர்வதேச சமூகத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்