இளவரசர் மீது குவியும் பாலியல் சர்ச்சைகள்... சங்கடத்தில் அரச குடும்பம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் அறைக்கு, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய தோழி கிஸ்லைன் மேக்ஸ்வெல் உட்பட பல இளம்பெண்கள் சென்றதாக முன்னாள் அரண்மனை பொலிஸார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மன்ஹாட்டன் சிறையில், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ருவின் நண்பரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.

அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, இளவரசர் ஆண்ட்ரூ தனது மார்பகத்தைத் தொட்டதாக எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜோஹன்னா ஸ்ஜோபெர்க் என்கிற பெண் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இளவரசர் ஆண்ட்ரூ மறுப்பு தெரிவித்தார். மேலும் அரண்மனை நிர்வாகமும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில், எப்ஸ்டீனின் நியூயார்க் மாளிகையின் உள்ளே இருந்து இளவரசர் ஒரு பெண்ணுக்கு கையசைக்கும் வீடியோ காட்சி வெளியானது. மேலும், எப்ஸ்டீனின் 'பாலியல் அடிமை' வர்ஜீனியா ராபர்ட்ஸ் இளவரசருடன் மூன்று முறை உறங்கியதாக தெரிவித்திருந்தார்.

இளவரசர் ஆண்ட்ரூ மீது அடுத்தடுத்து வைக்கப்படும் குற்றசாட்டுக்களால் அரண்மனை வட்டாரமும் வெறிசோடியுள்ளது.

இந்த நிலையில் 1998 முதல் 2004 வரை ராயல் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பால் பேஜ், ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய தோழி கிஸ்லைன் மேக்ஸ்வெல் உட்பட பல இளம்பெண்கள் இளவரசரை சந்திக்க பலமுறை அரண்மனைக்கு வந்துள்ளனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்