ஆமாம்.. பாலியல் குற்றவாளி வீடுகளில் தங்கினேன்: உண்மைகளை தெளிவுபடுத்திய இளவரசரின் அறிக்கை

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்க கோடீஸ்வரர் எப்ஸ்டீன் உடனான நட்பு குறித்து பிரித்தானியா இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விசாரணைக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எப்ஸ்டீன் தற்கொலை செய்துக்கொண்ட நாள் முதல், இளவரசர் ஆண்ட்ரூவின் தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், அமெரிக்க கோடீஸ்வரர் எப்ஸ்டீனின் தற்கொலைக்குப் பின்னர், எனது வாழ்க்கையில் ஏராளமான ஊடக ஊகங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

எப்ஸ்டீனுடனான எனது முன்னாள் தொடர்பு அல்லது நட்பு தொடர்பாக இந்த ஊகங்கள் குறிப்பாக உள்ளது.

எனவே மேலும் ஊகங்களைத் தவிர்க்க உண்மைகளை தெளிவுபடுத்த ஆர்வமாக உள்ளேன்.

நான் 1999-ல் எப்ஸ்டீனைச் சந்தித்தேன். நான் அவரை அறிந்த காலத்தில், நான் அவரை எப்போதாவது பார்த்தேன், அநேகமாக வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறைக்கு மேல் இல்லை. நான் அவருடைய பல குடியிருப்புகளில் தங்கியிருக்கிறேன்.

நான் அவருடன் கழித்த குறிப்பிட்ட நேரத்தில் எந்த நிலையிலும், அவர் கைது செய்யப்படுவதற்கும் தண்டனை பெறுவதற்கும் வழிவகுத்த எந்தவொரு நடத்தையையும் நான் சந்தேகித்ததும் இல்லை, பார்த்ததும் இல்லை.

2010-ல் அவர் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரை சந்தித்தது தவறு மற்றும் பிழை என்று நான் முன்பு கூறியுள்ளேன். அவரைப் பற்றி எனக்குத் தெரியும் என்று நான் நினைத்தது தவறாக இருந்தது. அவர் நான் நினைத்ததை போல் உண்மையான நபர் அல்ல என இப்போது நமக்குத் தெரியும். இதற்காக எனது வருத்தத்தை மட்டுமே நான் மீண்டும் வலியுறுத்த முடியும்.

அவரது நடவடிக்கைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனக்கு மிகுந்த அனுதாபம் உண்டு.

Image result for Prince Andrew was pictured going for a stroll through New York with Jeffrey Epstein

அவரது தற்கொலை பல பதிலளிக்கப்படாத கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது, பாதிக்கப்பட்ட அனைவரது நிலையையும் நான் புரிந்துக்கொள்கிறேன், அனுதாபப்படுகிறேன், மேலும், அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது ஒரு கடினமான நேரம், எப்ஸ்டீனின் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ளவோ அல்லது விளக்கவோ முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.

 Andrew has issued a fresh statement

எந்தவொரு மனிதனின் சுரண்டலையும் நான் எதிர்க்கிறேன், அத்தகைய எந்தவொரு நடத்தையையும் மன்னிக்கவோ, பங்கேற்கவோ அல்லது ஊக்குவிக்கவோ மாட்டேன் என இளவரசர் ஆண்ட்ரூ கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்