கர்ப்பிணி வயிற்றுக்குள் இருந்த ஏலியன் குட்டி: ஸ்கேனில் வெளியான அதிர வைக்கும் புகைப்படம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கர்ப்பிணி வயிற்றுக்குள் ஏலியன் குட்டி போல் உருவம் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

South Shields, Tyneside பகுதியை சேர்ந்த 16 வயதான சோஃபி என்ற பெண்ணின் வயிற்றிலே இவ்வாறு ஏலியன் உருவம் தோன்றியுள்ளது. மருத்துவ சோதனையின் போது குழந்தையின் நலம் குறித்து அறிய சோஃபி வயிற்றில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டுள்ளது.

அப்போது, வயிற்றுக்குள் குழந்தைக்கு பின்னால் ஏலியன் போன்ற உருவத்தை கண்டு 24 வயதான ஸ்டீபன் மற்றும் 16 வயதான சோஃபி தம்பதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும், ஸ்டீப்ன்- சோஃபி தம்பதிக்கு இரட்டை குழந்தை இல்லை என மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

இதுகுறித்து சோஃபி கூறியதாவது, குழந்தைக்கு அப்பால் இந்த கூடுதல் கண்களை காண முடிந்தது, அதன் தலை ஏலியன் போல இருந்தது. என்னுடைய முன்னாள் காதலர் வேற்று கிரக வாசிகள் மீது வெறி கொண்டவர். இந்த உருவம் முன்னாள் காதலனால் சபிக்கப்பட்டதாக இருக்கும் என அஞ்சியதாக சோஃபி கூறுனார்.

ஏலியன் என் குழந்தையை சாப்பிடும் என்று நான் பயந்தேன். நாங்கள் ஒரு பக்கம் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தோம், ஆனால் அது என்னவென்று யாராலும் புரிந்து கொள்ள முடியாததால் கொஞ்சம் பயப்பட்டோம்.

அக்டோபரில் குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு வாரங்களுக்குப் பிறகு, 16 வாரம் ஸ்கேன் எடுத்தபோது, எந்தவொரு பிரச்சனையும் இல்லை, ஏலியன் போல் ஏதும் இல்லை என தெரியவந்ததாக என சோஃபி கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers