ஒரே இரவில் மில்லியனராக மாறிய பிரித்தானிய தம்பதி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

உலோகத்தைக் கண்டுபிடிக்கும் கருவியின் மூலம் பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் மிகப் பெரிய புதையல் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த ஆடம் ஸ்டேபிள்ஸ் மற்றும் அவருடைய காதலி லிசா கிரேஸ் (42) ஆகியோர் சோமர்செட் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் கடந்த ஜனவரி மாதம், உலோக கண்டுபிடிப்பனை கொண்டு தேடலை ஆரம்பித்துள்ளனர்.

அப்போது இருவரும் எதிர்பார்க்காத அளவில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 2,600 பழங்கால நாணயங்களை கண்டுபிடித்தனர்.

இந்த நாணயங்கள் குறைந்தபட்சம் 1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பினை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. புதையலை கண்டுபிடித்ததும் தம்பதியினர் உள்ளூர் கவுண்டி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனை பற்றிய அதிகாரிகள், நாணயங்களை மதிப்பீடு செய்ய லண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்குள்ள வல்லுநர்கள் கடந்த ஏழு மாதங்களாக மதிப்பீடு செய்து பட்டியலிட்டுள்ளனர். இந்த வாரத்தின் பிற்பகுதியில் அவற்றை முதன்முறையாக பொதுமக்களுக்கு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பதுக்கல் புதையலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தம்பதியினர் ஒரே இரவில் மில்லியராக மாறியுள்ளனர். இதில் வரும் வருமானத்தில் 50 சதவீதம் நில உரிமையாளருக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், அந்த நேரத்தில் நாணயங்கள் கணிசமான தொகையாக இருந்திருக்கும். ஒரு முக்கியமான, பணக்கார நபருக்கு சொந்தமானவை. பாதுகாப்பிற்காக அவற்றை புதைத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers