பிரித்தானியா இளவரசர் ஹரி-மேகன் தம்பதி சமூக ஊடகங்களில் பிரபலமாக செலவிடும் பணம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
ஹரி-மேகன் தம்பதி தங்கள் சமூக ஊடக இருப்பை அதிகரிக்க ஆண்டுக்கு 30,000 பவுண்ட் சம்பளத்தில் டிஜிட்டல் தகவல்தொடர்பு ஊழியரை நியமித்துள்ளனர் என்று அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வட்டாரம் கூறியுள்ளது.
ஆடம்பரமான பேஷன் பிராண்டான Burberry-யில் பணிபுரிந்து வந்த 26 வயதான டேவிட் வாட்கின்ஸ் என்ற நபர், இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் புதிய டிஜிட்டல் தகவல்தொடர்பு ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரித்தானியா அரச இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த பணிக்கு அவர் விண்ணப்பித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9-5 மணி வரை வேலை என்றும், நம்பிக்கைக்குரிய விண்ணப்பதார்கள், உங்களின் கருத்துகளை மில்லியன் கணக்கானவர்கள் பார்ப்பார்கள் என்று வேலை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.
குறித்த பணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வாட்கின்ஸ் இப்போது Buckingham அரண்மனையில் ஆற்றல்மிக்க அணியுடன் இணைந்த பணிபுரிவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்துடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவர் கூறியதாவது: ஹரி மற்றும் மேகன் உலகை ஆள விரும்புகிறார்கள், சமூக ஊடகங்களின் மூலம் தங்களைப் பின்பற்றுபவர்களுடன் உண்மையிலேயே இணைந்து இருக்க விரும்புகிறார்கள்.
இதைச் செய்ய அவர்களுக்கு உதவ சரியான நபர் டேவிட் வாட்கின்ஸ், அவரது அற்புதமான வீடியோ திறன்கள் மற்றும் தொலைநோக்கு புகைப்படங்கள் ஏற்கனவே இளவரசரின் ரசிகர்களால் பாராட்டப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.