ஆறு பொலிசாரை காயப்படுத்திய பெண்: ஒருவருக்கு எலும்பு முறிவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் ஸ்விண்டனில் கட்டிடம் ஒன்றை கல்வீசி சேதப்படுத்தியதாக வந்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், 42 வயது பெண் ஒருவரை கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட அந்த பெண், பொலிசாரை கெட்ட வார்த்தைகளால் திட்டவும், தாக்கவும் தொடங்கியிருக்கிறார்.

அவரை நெருங்கிய பொலிசாரை, நகங்களால் கீறியும், பிடித்துத் தள்ளியும் விட்டதோடு, ஒரு பெண் அலுவலரின் கையைப் பிடித்துக் கடித்துமிருக்கிறார் அந்தப் பெண்.

அதில் அந்த பெண் அலுவலரின் எலும்பில் கீறல் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த பெண் முரட்டுத்தனமாக தாக்கியதில், மொத்தத்தில் ஒரு பெண் அலுவலர் உட்பட, ஆறு பொலிசார் காயமடைந்துள்ளனர்.

பொலிசாரை தாக்குவது குற்றம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் சொல்லியிருப்பதை வைத்துப்பார்த்தால், அந்த பெண் சிறைக்கு செல்வது உறுதி என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்