இரண்டாண்டுகள் அழகிய இளம்பெண்ணை காதலித்த நபர்: அவரது இரட்டை வாழ்க்கை தெரியவர ஏற்பட்ட அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இரண்டாண்டுகள் ஒரு அழகிய இளம்பெண்ணை காதலித்து வந்த ஒரு நபருக்கு, பின்னர் அந்த பெண்ணின் இரட்டை வாழ்க்கை குறித்து தெரியவந்ததால் அதிர்ச்சிக்குள்ளானார்.

Cornwallஇல் வாழ்ந்து வந்த தனது 30 வயதுகளில் இருக்கும் Tom, இணையத்தில் Julie என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

விவாகரத்தாகி ஒரு மகனுடன் வாழும் Tomக்கு Julieயைக் கண்டதும் காதல் ஏற்பட்டிருக்கிறது.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இன்பத்தை வாரி வழங்கிய Julieயைப் பார்க்க அவரது வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் Julie உள்ளடையுடன்தான் இருப்பாராம். அத்துடன் வீடும் எப்போதும் அலங்கோலமாக இருக்குமாம்.

ஆனால் இன்பத்தை வாரி வழங்க மட்டும் தவறுவதில்லையாம் Julie. பின்னர் இருவருமாக ஒரு வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.

தன்னிடம் அவ்வளவு வசதி இல்லை என்று எப்போதும் Julie கூறினாலும், அவரது வங்கிக் கணக்கில் எப்போதும் ஏராளம் பணம் இருப்பது Tomக்கு தெரியவந்தபோது அவருக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கிறது.

ஏழு மாதங்களுக்குப்பின் அந்த வீட்டுக்கு இருவரும் குடிபோகும்போது முதல் முறையாக அந்த வீடு நேர்த்தியாக சுத்தமாக இருப்பதைக் கண்டதோடு, அங்கு தனது கல்விச் சான்றிதழ்களை Julie பிரேம் செய்து மாட்டியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் Tom.

அந்த வீட்டுக்கு இருவரும் குடிபோன இரண்டு மாதங்களுக்குப்பிறகு, ஒரு நாள் தனது மகனை அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார் Tom.

அப்போது பணம் குறித்த பேச்சு வந்தபோது, Tom தன்னைவிட அதிகம் சம்பாதிப்பதால், அவர்தான் வீடு வாங்கிய தொகையில் பெருமளவு தொகையை கொடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார் Julie.

அப்போது சிறிது வாக்குவாதம் ஏற்பட, திடீரென்று Julie, கோபத்தில் Tomஉடைய மகன் மீது பாய்ந்திருக்கிறார்.

பயத்தில் வெலவெலத்துப்போயிருக்கிறான் அந்த சிறுவன். இதுவரை தெரியவராத ஒரு முகத்தை Julie காட்டுவதைக் கண்ட Tomம் அதிர்ந்து போயிருக்கிறார்.

சரி, மகனை அழைத்து வருவது அவளுக்கு பிடிக்கவில்லை என்று நினைத்த Tom, பின்னர் Julieயை அழைத்துக் கொண்டு வெளியே செல்லும்போது வேறொரு ஆணைக்குறித்து பேசியிருக்கிறார் Julie.

அவர்கள் சேர்ந்து வேலை செய்பவர்களாக இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார் Tom. ஆனால் ஒரு நாள் Tomக்கு அந்த ஆணுடைய மனைவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில், உங்கள் காதலியும் எனது கணவரும் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் அந்த பெண்.

இது குறித்து Tom விசாரிக்க பல விடயங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

அந்த ஆணும் Julieயும் சேர்ந்து அவரது வீட்டில் தங்குவதை அக்கம்பக்கத்தினர் உறுதி செய்திருக்கிறார்கள்.

Julieயிடம் இது குறித்து Tom கேட்க, அப்படியே மாறியிருக்கிறார் அவர். Tomஇடம் பயங்கரமாக சண்டையிட்டு அவரைப் பிடித்துத் தள்ளியதோடு, பொலிசாரிடமும் அவரைக் குறித்து புகாரளித்திருக்கிறார் Julie.

அதன் பின்னர்தான் Julie எப்போதும் போனில் பேசிக்கொண்டே இருப்பதும், புகைப்படக் கலைஞர்களை வைத்து கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியதும் ஒவ்வொன்றாக நினைவு வர, சந்தேகத்துடன் Julieயைக் குறித்து இணையத்தில் தேடியிருக்கிறார் Tom.

அப்போதுதான் Tomக்கு ஒரு பெரிய உண்மை தெரியவந்திருக்கிறது. அது, Julie ஒரு பாலியல் தொழிலாளி என்ற உண்மை! அதிர்ந்து போயிருக்கிறார் Tom.

தனது பணத்துக்காக காதல் என்ற பெயரில் Julie தன்னை நன்றாக ஏமாற்றி பயன்படுத்திக் கொண்டதும் அவருக்கு பின்புதான் தெரியவந்துள்ளது.

ஒரு நாள் தங்கள் வீட்டில் எடுத்த புகைப்படங்களைத்தான் Julie தனது இணைய பக்கத்தில் ஒரு பாலியல் தொழிலாளியாக தன்னை விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் அவருக்கு தெரியவந்துள்ளது.

டேட்டிங் இணையதளத்தில், தான் விவாகரத்தான நபர் என்பதை அறிந்து தன்னை Julie குறிவைத்துள்ளார் என்கிறார் Tom.

அவள் இப்படி ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்கிறாள் என்பது எனக்குத் தெரியாது என்று கூறும் Tom, நான் அவளுக்கு எல்லாவற்றையும் கொடுத்தேன், அவளை திருமணம் கூட செய்து கொண்டிருப்பேன் என்கிறார்.

ஆக, நான் ஒரு பாலியல் தொழிலாளியைச் சந்தித்திருக்கிறேன், முட்டாளாக்கப்பட்டு விட்டேன் என்கிறார் Tom.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்