2 மணிநேரத்தில்... லண்டனில் கனமழை: உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை விடுப்பு

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இடியுடன் கூடிய மழை காரணமாக பிராந்திய மக்களுக்கு உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரத்தில் ஒரு மாத மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். 60 மிமீ வரை மழை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் பொழியக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய கடுமையான வானிலை எச்சரிக்கை வடகிழக்கு ஸ்காட்லாந்திலிருந்து லண்டன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் முதல் நள்ளிரவு வரை வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்: வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் விரைவாக வெள்ளத்தில் மூழ்குவதற்கு சிறிய வாய்ப்பு உள்ளது, வெள்ள நீர், மின்னல் தாக்குதல்கள், ஆலங்கட்டி அல்லது பலத்த காற்று ஆகியவற்றிலிருந்து சில கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேகமாக பாயும் நீர் அல்லது ஆழமான வெள்ள நீரால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிறிய வாய்ப்பு உள்ளது, மேலும் சில பகுதிகள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளால் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

வெள்ளம் அல்லது மின்னல் தாக்குதல்கள் நிகழும் இடங்களில், ரயில் மற்றும் பேருந்து சேவைகளில் தாமதங்கள் மற்றும் சில ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் சில வீடுகள் மற்றும் வணிகங்களுக்கான பிற சேவைகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திடீர் வெள்ளம் சில சாலைகளை மூட வழிவகுக்கும்.

அடுத்த ஐந்து நாட்கள் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பொழியும், ஆனால் நாட்டின் தென்கிழக்கில் வெப்பமாக இருக்கும் என்று வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலை குறித்து முன்னறிவிப்பாளர்கள் கூறியதாவது: வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்காட்லாந்தில் மழை பொழிகிறது. வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தென்மேற்கில் இடியுடன் கூடிய மழை மெதுவாக குறைந்துவிடும். வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பின்னர் தென்கிழக்கு ஸ்காட்லாந்தில் மழை பொழியும். தென்கிழக்கில் வெப்பம் நிலவும் என அறிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்