பிரித்தானியாவில் பத்து ஆண்டுகளாக பெற்றோரால் கைதியாக சிறைபிடித்து வைக்கப்பட்ட இளம் பெண்ணை பொலிசார் மீட்டுள்ளனர்.
Kent, Tenterden பகுதியில் உள்ள ஒரு வீட்டிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகள் சிறுமி குறித்த தகவலை சரிபார்க்கத் தவறியதால், அவரது பெற்றோர் பத்து ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இளம் பெண்ணின் நிலை குறித்து கவலையடைந்த பக்கத்து வீட்டுக்கார் அளித்த தகவலை தொடர்ந்து 19 வயது பெண் குடும்ப வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். ஒன்பது வயதிலிருந்தே வீட்டில் சிறையில் கொடுமை அனுபவித்து வந்த சிறுமி துன்பகரமான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமிக்கு வெளி உலகம் தெரியாமல் அடைத்து வைத்து கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவை என அனைத்து விதமான தொடர்புகளில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டதற்காக பெற்றோர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது பலதரப்பட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த நபர் ஒருவர் கூறியதாவது: சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அவரின் உடல் மற்றும் மனநல தேற உதவிகளைப் பெற்று வருகிறார்.
இருப்பினும், Kent வீட்டுச் சிறைச்சாலையில் 10 ஆண்டுகளாக சிறுமிக்கு என்ன நடந்தது என்று என்று தெரியவில்லை. அவளுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவளுடைய பெற்றோர் பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
அன்று முதல் சிறப்புத் தேவைகளைக் கொண்ட சிறுமி காணப்படவில்லை. அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். ஆனால், இது எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதை புரிந்துகொள்வது கடினம் என கூறியுள்ளார்.
மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் அவரது பெற்றோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.