பிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்க மகாராணி அனுமதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு பிரதமர் மோரிஸ் இரண்டாம் எலிசபெத்திடம் ஒப்புதல் கேட்டிருந்த நிலையில், அதற்கு ராணி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதி என தெரிவித்திருந்தார்.

அதோடு அவர், பிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் ராணியிடம் ஒப்புதல் கேட்டிருந்தார்.

இதையடுத்து தற்போது நாடாளுமன்றத்தை அக்டோடபர் 14-ஆம் திகதி வரை முடக்க பிரதமருக்கு இரண்டாம் எலிசபெத் ராணி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், செப்டம்பர் 9 முதல் 12 வரையிலும் மற்றும் அதைத்தொடர்ந்து அக்டோபர் 14-ஆம் திகதி வரையிலும் நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers