லண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வருக்கு எதிரான கண்டனத்தால் பரபரப்பு!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவின் லண்டன் விமான நிலையத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரையிறங்கியபோது, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், துபாயில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு விமானத்தில் சென்றார்.

நேற்றைய தினம் அமைச்சர்களுடன் லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே சமயம், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசுக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து முதல்வரும், அமைச்சர்களும் மாற்று வழியில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தொற்று நோய் தடுப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். அத்துடன் மருத்துவர், மருத்துவ பணியாளர்களை பணி தரத்தை மேம்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்