லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அடையாளம் விரைவில் தமிழகத்தில்! அசத்திய தமிழக முதல்வர்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பிரித்தானியா, அமெரிக்கா, அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாக லண்டன் சென்றுள்ள அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோட் சூட் உடையில் அசத்தலாக லண்டனில் எடப்பாடி பழனிச்சாமி உலா வரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் முக்கியமான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தானது.

லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக அதன் நிர்வாகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க மருத்துவமனையாக கருதப்படும் கிங்ஸ் மருத்துவமனை கடந்த 1840-ல் தொடங்கப்பட்டது.

இதோடு இதே போல் தமிழகத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசின் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்